சினிமா செய்திகள்

மே தின வாழ்த்து சொல்லல.. அஜித்திற்கு மட்டும் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்!

Published

on

’தல’ அஜித்தின் 48வது பிறந்த தினம் இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் அஜித்தின் பிறந்த நாள் வாழ்த்துகள் இல்லாத பக்கங்களையே பார்க்க முடியாதபடி வாழ்த்துகள் குவிந்து கிடக்கின்றன.

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் அஜித்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

”எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என நடிகர் அஜித்திற்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

உழைப்பாளர் தினத்திற்கு வாழ்த்துகள் சொல்லாமல் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அஜித்திற்கு மட்டும் பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னது ட்விட்டரில் எதிர்கட்சியினரால் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 https:

Trending

Exit mobile version