இந்தியா

மே மாதம் சிலிண்டர் விலை ரூ.192 குறைப்பு!

Published

on

சென்னையில் இன்று மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 192 ரூபாய் குறைந்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பிற நகரங்களிலும் சிலிண்டர் விலையைக் குறைத்து அறிவித்துள்ளன.

சென்னையில் மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டர் விலை 565.50 ரூபாய் என்றும், டெல்லியில் 581.50 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 584.50 ரூபாய் என்றும், மும்பையில் 569 ரூபாய் என்று மே மாதம் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் 19 கிலோ எடை கொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 259.50 ரூபாய் சரிந்து 1114.50 ரூபாயாகவும், டெல்லியில் 1029 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1086 ரூபாயாகவும், மும்பையில் 1144.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், சர்வதேசச் சந்தையின் விலையைப் பொறுத்து மாற்றி அமைக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version