இந்தியா

இனி கணிதம், இயற்பியல், வேதியியல் தேவையில்லை: எந்தெந்த படிப்புகளுக்கு தெரியுமா?

Published

on

இனி ஒரு சில படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், அறிவியல் தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஜினியரிங், ஆர்கிடெக்சர் உள்பட பல படிப்புகளுக்கு கணிதம் இயற்பியல் வேதியல் பாடங்களை பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இதுவரை இருந்தது .

ஆனால் தற்போது ஆர்கிடெக்சர் உள்பட ஒரு சில படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் இயற்பியல் வேதியல் கணிதம் படிப்பித்த கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில் வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல்,ஆர்கிடெக்சர் எனப்படும் கட்டிடக்கலை, பேஷன் டெக்னாலஜி, பேக்கேஜிங் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் கணிதம் இல்லாமல் இருந்தாலும் படிக்கலாம் என அறிவித்துள்ளது .

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version