ஆரோக்கியம்

சுவையான மதுரப் புளிசேரி செய்வது எப்படி?

Published

on

தேவையானவை:

1. அன்னாசி பழம் – அரை கிலோ
பூசணிக்காய் – கால் கிலோ (இதை தேவைப்பாட்டலாம் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்).
நீண்ட மிளகாய் – 125 கிராம்

2. மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் – நான்கு
உப்பு – தேவைக்கு

3. கெட்டியான தயிர் – அரை லிட்டர்
4. தேங்காய் துருவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – மூன்று
சீரகம் – அரை தேக்கரண்டி
5. தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
6. கடுகு – கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – ஒன்று(நறுக்கவும்)
வெடநதயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – தேவைக்கு

செய்முறை:

• எண் ஒன்றில் உள்ள பொருட்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக சதுர வடிவில் நறுக்குஙகள். அதை எண் இரண்டில் உள்ள பொருட்களோடு விட்டு வேகவையுங்கள்.

• எண் நான்கில் உள்ள பொருட்களை ஒன்றாக்கி அரைத்தெடுத்து, தயிரில் கலக்கி அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பொருளில் சேர்த்து கிளறுங்கள். கொதிக்கும்போது தீயை அணைத்துவிடுங்கள்.

• தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதில் எண் ஆறில் உள்ள பொருட்களை கொட்டி தாளித்து, கலவையில் சேருங்கள். இனிப்பு சுவை நிறைந்த மதுரப் புளிசேரி தயார்.

Trending

Exit mobile version