வேலைவாய்ப்பு

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் வேலைக்கு அறிவிக்கை வெளியீடு!

Published

on

தமிழகத்தில் பள்ளிகளில் காலியிடங்கள் 2,144 உள்ளது. இதில் முதுநிலை ஆசிரியர் வேலைகளுக்கு நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்விற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் வேலைகளின் எண்ணிக்கையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 2,144

பாட வாரியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை:
1. தமிழ் 319
2. ஆங்கிலம் 223
3. கணிதம் 279
4. இயற்பியல் 210
5. வேதியியல் 56
6. தாவரவியல் 154
7. விலங்கியல் 144
8. வரலாறு 104
9. புவியியல் 11
10.பொருளாதாரம் 211
11.வணிகவியல் 99
12.அரசியல் அறிவியல் 14
13.உடற்கல்வியியல் 16
14.உயிர்வேதியியல் 1
15.நுண்ணுயிரியியல் 1
16.மனையியல் 1
17.இந்திய பண்பாடு 1
என மொத்தம் -2144 வேலைகள் நிரப்பப்பட உள்ளன.

இதை ஆன்லைன் முறையில் இந்தத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version