டிவி

ஆஸ்திரேலியா மாஸ்டர் செஃப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி மத போதகர்!

Published

on

ஆஸ்திரேலியா தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த உலக புகழ் பெற்ற மாஸ்டர் செஃப் போட்டியை வென்றுள்ளார் இந்திய வம்சாவளி மத போதகரான ஜஸ்டின் நாராயண்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மாஸ்டர் செஃப். இந்த நிகழ்ச்சியில் சிறந்த சமையல் செய்பவர்கள் யார் என்ற போட்டி நடைபெறும்.

மிகவும் சவாலான இந்த நிகழ்ச்சி இந்தியர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். விரவில் இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சன் டிவி சேனல்கள் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கிய எண்டமால் ஷைன் நிறுவனம் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த மாஸ்டர் செஃப் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 13வது சீசனில் இந்திய வம்சாவளியான ஜஸ்டின் நாயரண் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். வங்க தேசத்தைச் சேர்ந்த கிஷ்வர் சவுதிரி மற்றும் பீட் காம்ப்பெல் உள்ளிட்டவர்களுடன் போட்டி போட்டு ஜஸ்டின் நாராயண் வென்றுள்ளார்.

மாஸ்டர் செஃப் போட்டியில் வெற்றி பெற்ற ஜஸ்டின் நாராயணுக்கு 2,50,000 ஆஸ்திரேலியா டாலர் வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

முன்னதாக 2018-ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறை அதிகாரி சசி செல்லையா இந்த போட்டியில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version