சினிமா செய்திகள்

2020-ம் ஆண்டு டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த மாஸ்டர்!

Published

on

2020-ம் ஆண்டு டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென் இந்தியப் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் மார்ச் மாதத்திற்குப் பிறகு படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2020-ம் ஆண்டு டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படங்கள் பட்டியலில், டாப் 5 இடங்களில் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.

1) மாஸ்டர்

விஜய் சேதுபதி, விஜய், மாஸ்டர்

விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்து தற்போது வரை வெளியாகும் இருக்கும் படம் மாஸ்டர். மாஸ்டர் படம் பற்றி டிவிட்டரில் அதிகம் பதிவிடப்பட்டும், பேசப்பட்டும் உள்ளது. 2021 பொங்கலுக்கு படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

2) வக்கீல் சாப்

இரண்டாம் இடத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பரவைப் படத்தின் தெலுங்கு ரீமேக் வாக்கீல் சாப் பெற்றுள்ளது. இந்த படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார்.

3) வலிமை

அஜித் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பில் உள்ள திரைப்படம் வலிமை. இதுவரை அப்டேட் வராத படம். ஆனால் அப்டேட் கேட்டு தயாரிப்பு குழுவினரை ரசிகர்கள் டார்ச்சர் செய்துள்ளனர். தயாரிப்புக் குழுவும் இப்போதைக்கு அப்டேட் யாரும் கேட்காதீர்கள் என்றும் தெரிவித்துவிட்டது. புத்தாண்டு அல்லது பொங்கலுக்கு வலிமை படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

4) சர்காருவரிபாட்டா

மகேஷ் பாபுவின் சர்காருவரிபாட்டா இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

5) சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த படம் சூரரைப் போற்று. இந்த படம் தீபாவளிக்கு முன்பாக அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

seithichurul

Trending

Exit mobile version