வைரல் செய்திகள்

யூட்யூப்-ல் ‘மாஸ்டர்’ டீசர் புதிய சாதனை- கொண்டாடும் ட்விட்டர்வாசிகள்!

Published

on

யூட்யூப் தளத்தில் நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்பட டீஸர் புதிய சாதனை படைத்திருப்பதை ட்விட்டர்வாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு மாதத்துக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பிலான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. டீசர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 2 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்தது மாஸ்டர் டீசர்.

அடுத்தத்தாக சமீபத்தில் 2020-ம் ஆண்டு அதிகம் ட்வீட் செய்யப்பட்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனை மாலைகளை சூட்டிக்கொண்டுள்ள மாஸ்டர் திரைப்படம் தற்போது மேலும் ஒரு சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளது. யூட்யூப் தளத்தில் 5,00,000 கமென்ட்ஸ்களைப் பெற்றுள்ளதே அந்த சாதனை.

இதனை ட்விட்டர் தளத்தில் கொண்டாடி வரும் ரசிகர்கள் ‘மாஸ்டர் டீசர்’ என்னும் ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

 

Trending

Exit mobile version