சினிமா

ஓடிடி-யில் வெளியாகும் மாஸ்டர்… கலக்கத்தில் தியேட்டர்களின் நிலை…!

Published

on

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 15 நாட்களில் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் ஜனவரி 29ம் தேதி வெளியாக உள்ளது. கொரோனா தோற்றால் மூடப்பட்ட திரையரங்குகளில் மாஸ்டர் வெளியான பின்னர் தான் மக்கள் கூட்டம் அதிக அளவில் வர தொடங்கியது. ஆனால், தற்போது ஓடிடி-யில் வெளியாக உள்ளது திரையரங்குகளின் தற்போதைய நிலையை கேள்விக்கு உள்ளாக்கும் விதமாக உள்ளது.

முன்னர் தனுஷ் நடிப்பில் உருவான பட்டாஸ் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 40 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியான போதும் தர்பார் திரைப்படம் 50 நாட்களை திரையரங்கில் கடந்த நிலையில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதும் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில் திரையரங்கில் வெளியான பதினைந்தே நாட்களில் ஓடிடி தளத்தில் திரைப்படம் வெளியாகும் புதிய வழக்கம் தமிழ் சினிமாவிற்கு புதிதாக ஒன்றாக மாறியுள்ளது.

Trending

Exit mobile version