சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ மாஸான ரிலீஸ்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; முட்டுக்கொடுக்கும் ‘தளபதியன்ஸ்’!

Published

on

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் இரண்டே நாட்களில் வெள்ளித்திரையில் படையல் படைக்க உள்ளது. பொதுவாக பொங்கல் சமயங்களில் பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸாவதும், அதை மக்கள் கொண்டாடித் தீர்ப்பதும் யாருக்கும் பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால், தற்போது கொரோனா பரவல் காலகட்டம் என்பதனால், மாஸ்டர் ரிலீஸ் இன்னும் கொஞ்ச நாட்கள் தள்ளிப் போயிருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக மாஸ்டர் படத்துக்கு ஏதுவாக, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கையை மட்டுமே நிரப்பிக் கொள்ளலாம் என்கிற கட்டுப்பாடுக்குத் தளர்வு அளித்து, 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் ஆணைப் பிறப்பித்தது தமிழக அரசு. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மத்திய அரசும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மீண்டும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக அரசு. இந்தப் பிரச்சனை ஓய்ந்த நிலையில், நேற்று மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்தது.

ஆன்லைனில் மட்டுமல்லாமல், தியேட்டர் கவுன்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை சூடுபிடித்தது. ரசிகர்களும் முண்டியடித்து டிக்கெட் வாங்குவதில் ஈடுபட்ட காரணத்தினால், கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன. இதனால் கொதிப்படைந்த நெட்டிசன்கள், ‘இப்போ மாஸ்டர் தேவையா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இதற்கு விஜய் ரசிகர்கள், ‘அரசியல் கட்சிக் கூட்டம், மற்ற பொழுதுபோக்கு கூடங்கள்ல கூடதான் கூட்டம் அள்ளுது. அங்கெல்லாம் எங்க போச்சு கொரோனா கட்டுப்பாடு?’ என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மாஸ்டர்-க்கு எழுந்த எதிர்வினைகளும் அதற்கான பதிலடிகளும்,

seithichurul

Trending

Exit mobile version