சினிமா செய்திகள்
மாஸ்டர் திரைப்படத்துக்கு ‘U’ சான்றிதழ் கிடையாது..!
மாஸ்டர் திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஓராண்டாகவே பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்களைக் காக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2020 முதல் வெளியாகும் எனக் காத்திருக்கத் தொடங்கி பொங்கலுக்காவது படம் வெளியாகுமா என ரசிகர்கள் ஏங்கும் நிலைதான் உள்ளது.
See you soon ????????????????#MasterUAcertified pic.twitter.com/w0k2rA43hd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 24, 2020
இந்த சூழலில் மாஸ்டர் படத்துக்கான தணிக்கை சான்றிதழ் ஆக U/A வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என ட்விட்டர்வாசிகள் நம்பிக்கையில் மாஸ்டர் படத்தை மீண்டும் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.