சினிமா செய்திகள்

’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அஜித் பட இயக்குனர்: ஹீரோ இவர்தான்!

Published

on

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த பிரிட்டோ தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார், இந்த படத்தை அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களான பில்லா, ஆரம்பம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ஹீரோ தயாரிப்பாளர் பிரிட்டோவின் மருமகன் ஆகாஷ் முரளி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பிரிட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

’மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எங்களது XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. பன்முக திறமை வாய்ந்த இயக்குனர் விஷ்ணுவர்தன் அவர்களுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

நடிகர் முரளியின் மகனும், அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நலன் விரும்பிகளுக்கும் எங்களது எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version