சினிமா செய்திகள்

’மாஸ்டர்’ படம் இவ்வளவு நீளமான படமா… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Published

on

மாஸ்டர் திரைப்படத்தின் கால அளவு குறித்தத் தகவல் சென்சார் சான்றிதழ் மூலம் வெளிப்பட்டுள்ளது.

வருகிற பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய்- விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளிவர உள்ளது. மாஸ்டர் படத்துக்காக கிட்டத்தட்ட ஓராண்டாகக் காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது உற்சாக மிகுதியில் உள்ளனர். சமீபத்தில் தான் மாஸ்டர் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது.

இந்நிலையில் சென்சார் போர்டு சான்றிதழ் மூலம் படத்தில் கால நேரம் வெளியாகி உள்ளது. படம் மொத்தம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, மூன்று மணி நேர மாஸ் படத்தை தளபதி விஜய் பொங்கல் விருந்தாக அளிக்கிறார் என சமுக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழக அரசு தற்போது திரை அரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என அறிவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகள் திரை அரங்குகளிலும் அமல்படுத்தப்பட்டு உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Trending

Exit mobile version