சினிமா செய்திகள்

ஆன்லைனில் வெளியான மாஸ்டர் திரைப்படம்… வைரலாகப் பரவும் வீடியோ பிட்டுகள்..!

Published

on

ஆன்லைனில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் கசிந்துள்ளது.

மாஸ்டர் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று படம் ஆன்லைனின் கசிந்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்காக வருகிற ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் இன்றே ஆன்லைனில் படம் கசிந்தது பல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சுமார் 40 நிமிடங்களுக்கான படத்தின் வீடியோ காட்சிகள் துண்டு துண்டாக வெளியாகி உள்ளது. இது படக்குழுவினருக்கு மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரை அரங்கத்தில் அமர்ந்து வீடியோ பதிவிட்டது போன்றதாக லீக் ஆன வீடியோ காட்சிகளின் தரம் உள்ளது. முதலில் டெலிகிராம் தளத்தில் தான் மாஸ்டர் படத்தின் முக்கிய வீடியோ காட்சிகள் லீக் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செய்தி வெறும் புரளி தான் என சாரர் சொன்னாலும் பைக் ரேஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என துண்டுத் துண்டாக சுமார் 40 நிமிடப் படக் காட்சிகள் ஆன்லைனில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தை அன்லைனில் யாராவது உங்களிடம் பரிந்தால் அல்லது பார்த்தால், அதுபற்றி report@blockxpiracy.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்குமாறும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version