சினிமா செய்திகள்

பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ உறுதி… லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்!

வருகிற பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வெளிவருவது உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது

Published

on

வருகிற பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு விருந்தாக மாஸ்டர் வெளியீடு இருக்கும் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2020-க்கு வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு என தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஒரு வழியாக தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் பெரிதாக இல்லை. ஹாலிவுட் படங்கள் மட்டுமே தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. வருகிற பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வெளிவருவது உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படக்குழுவினரும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

தளபதி விஜய் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் விரைவில் ஈடுபடுவார் என்றும் தெரிகிறது. தளபதி 65 படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version