சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ படத்தை அமேசான் ப்ரைம்-ல் இதுவரை எத்தனைப் பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?

Published

on

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் இதுவரையில் எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

விஜய்- விஜய் சேதுபதி நடிப்பிலான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ம் தேதி திரை அரங்கங்களில் வெளியானது. வெளிநாடு மற்றும் வெளி மாநில தமிழ் மக்களுக்காக கடந்த ஜனவரி 29-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்திலும் மாஸ்டர் வெளியிடப்பட்டது. திரை அரங்கங்களில் வெளியான பின்னரும் மாஸ்டர் படத்துக்கு ஓடிடி தளத்தில் வரவேற்பு இருக்குமா என்ற கேள்வி இருந்தது.

ஆனால், எதிர்பார்க்காத வகையில் மாஸ்டர் அமேசானில் வெளியான அன்றே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அடுத்து ஒரு வாரத்துக்கான பார்வையாளர் கணக்கெடுப்பில் ஒரு வாரத்தில் மாஸ்டர் படத்தை 2.50 கோடிக்கும் அதிக மக்கள் பார்த்துள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Trending

Exit mobile version