சினிமா செய்திகள்

மாஸ்டருடன் மோத விரும்பும் ஈஸ்வரனும், சுல்தானும்! ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதா?

Published

on

மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் எப்படியும் ஜனவரி 13-ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று போஸ்டர் மற்றும் டீசர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், ஈஸ்வரன் படத்தைத் தள்ளிவைக்கலாம் என்று பேச்சுவாத்தை நடந்துள்ளது. ஆனால் சிம்பு என்ன ஆனாலும் சரி ஈஸ்வரன் படத்தைப் பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் மட்டுமல்லாமல் கார்த்தியின் சுல்தான் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுல்தான் பட தயாரிப்பாளர்களிடம் விசாரித்த போது, மாஸ்டர் படம் 1000 திரை அரங்குகளில் வெளியிடப்பட்டாலும், தேவையான அளவு திரை அரங்குகள் கிடைத்தால் பொங்கலுக்குச் சுல்தான் வெளியாகும். எனவே பொங்கலுக்கு ஒருவாரம் முன் வரை ரிலீஸ் தேதி குறித்து முடிவு செய்யப்பட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் 13-ம் தேதி வெளியானால், முதல் இரண்டு மூன்று நாட்களுக்குத் தான் அதிக திரை அரங்குகளில் படத்தைப் போட முடியும். எனவே பொங்கலன்று 15-ம் தேதி ஈஸ்வரன் மற்றும் சுல்தான் படங்களில் ஏதேனும் ஒன்று வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

seithichurul

Trending

Exit mobile version