சினிமா செய்திகள்

நடிகை தமன்னா மீது மாஸ்டர் செஃப் நிறுவனம் வழக்கு!

Published

on

நடிகை தமன்னா மீது மாஸ்டர் செஃப் நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதியும் தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்கள் என்பதும். இதற்காக இருவருக்குமே கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் திடீரென தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கப்பட்டார். இதனை அடுத்து தன்னை திடீரென்று நீக்கியது ஏன் என்பது குறித்து மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர்களுக்கு தமன்னா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த நோட்டீஸில் தன்னை திடீரென நீக்கியது தவறு என்றும் தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமன்னாவின் வழக்கறிஞர் நோட்டீசுக்கு மாஸ்டர் செஃப் நிறுவனம் பதிலளித்துள்ளதோடு பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்காக ரூபாய் 2 கோடி சம்பளம் பேசி தமன்னாவை ஒப்பந்தம் செய்து இருந்தோம் என்றும், இந்த ஒப்பந்தத்தின்படி 18 நாட்களாக எங்கள் நிகழ்ச்சியில் தமன்னா நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும், ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டது என்றும், மீது இரண்டு நாட்கள் அவர் நடித்துக் கொடுத்தால் மீதி பணத்தை தர தயாராக இருக்கிறோம் என்றும் பதிலளித்துள்ளனர்.

மேலும் தமன்னா பல்வேறு பணிகளுக்கு சென்று எங்களுடைய படப்பிடிப்பில் தாமதம் செய்ததால் 5 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஆனால் தமன்னா உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version