உலகம்

ரஷ்யாவில் இனி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு செல்லாதா? பரபரப்பு தகவல்!

Published

on

ரஷ்யாவில் இனி கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 12 நாட்களாக தாக்கி போர் செய்து வருகிறது என்பதும் இந்த போரினால் பல முக்கிய நகரங்களை ரஷ்யாவிடம் உக்ரைன் இழந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று தற்காலிக போர் நிறுத்தம் என்று அறிவித்த போதிலும் ஒரு சில பகுதிகளில் இன்னும் சண்டை நடந்து கொண்டு தான் இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த உலக நாடுகள் பல்வேறு தடைகளையும் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். உலக நாடுகள் மட்டுமின்றி தனிப்பட்ட நிறுவனங்களான கூகுள் மைக்ரோசாப்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் மாஸ்டர் மற்றும் விசா கார்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் சேவை ரஷ்யாவில் நிறுத்தப்படும் எனஅறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் இனி விசா அட்டைகள் மூலம் ரஷ்யாவுக்கு உள்ளேயும் வெளியேயும் எந்தவிதமான பரிவர்த்தனையும் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளது .

அதேபோல் ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் மாஸ்டர் கார்டு சேவையும் நிறுத்தப்படும் என மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் வெளிநாட்டில் வசிக்கும் ரசிகர்களுக்கு செல்லாது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version