வணிகம்

அதிகரிக்கும் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

Published

on

சர்வதேச ஐடி நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் முனைப்பாக உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறையில் ஏற்பட்டு வரும் ஆட்டோமேஷன் போன்ற காரணங்களால் ஆட்குறைப்பு, பணிநீக்கம் போன்றவை அதிகமாகி வந்தன. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்களின் வியாபாரம் மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. புதிய ஆர்டர்கள் கிடைக்காமல், இருக்கும் ஊழியர்களுக்கு வேலை வழங்க முடியாமல் சம்பளத்தை மட்டும் அளிக்கும் நிலைக்கு ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கொரொனா தொற்று ஆரம்பக்கட்டத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் இருக்காது என்று அறிவித்த ஐபிஎம் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள், தற்போது பணிநீக்கம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளன.

ஐபிஎம்

ஐபிஎம் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 3,50,000 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 2000 நபர்களைப் பணி நீக்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சில நூறு ஊழியர்கள் இதனால் வேலையை இழப்பார்கள்.

காக்னிசண்ட்

தமிழர்கள் அதிகம் வேலை பார்க்கும் கானிசெண்ட் நிறுவனத்தில் அண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காக்னிசெண்ட் நிறுவனத்தின் 2,90,000 ஊழியர்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் நபர்கள் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்காததாலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும் தங்களது பட்ஜெட்டை குறைத்துள்ளதாலும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிலும் திறன் குறைந்த ஊழியர்களை மட்டுமே பணியிலிருந்து நீக்குவதாக ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன.

சர்வதேச ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கத்தைக் கையில் எடுத்துள்ளன, ஆனால் இந்திய ஐடி நிறுவனங்களான இஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் நிறுவனங்கள் இதுவரை பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. கொவிட்-19 காரணமாக பணிநீக்கம் இருக்காத என்று டிசிஎஸ் நிறுவனம் தங்களது 4வது காலாண்டு அறிக்கையின் போது தெரிவித்துள்ளது. ஆனால் திறன் அடிப்படையில் இருக்க வாய்ப்புள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் பணிநீக்கம் இந்த ஆண்டு இருக்காது. ஆனால் திறன் அடிப்படையில் பணிநீக்கம் தொடரும் என்று தலைமை செயல்பாட்டு அதிகாரியான பிரவின் ராவ் அன்மையில் தெரிவித்துள்ளதை ஐடி ஊழியர்கள் கவனிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version