இந்தியா

ஐநா பாதுகாப்பு குழு தவறுக்கு நேரு தான் காரணம்; குற்றம்சாட்டும் ஜேட்லி!

Published

on

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் ஏற்பட்ட தவறுக்கு நேரு தான் காரணம் என்று மத்திய அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் என அறிவிக்கச் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் இந்தச் செயல் ஏமாற்றம் அளிப்பதாகக் இந்திய கூறிவருகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவரது டிவிட்டர் பக்கத்தில் “மோடி பலவீனமாக உள்ளார். இந்தியாவுக்கு எதிரான சீனா குறித்து வாயையே திறக்கமாட்டேன் என்கிறார்.

குஜராத்தில் சீன அதிபருடன் ஊஞ்சலாடுவதும், டெல்லியில் அவரைக் கட்டியணைப்பதும், சீனாவில் அவருக்குத் தலை வணங்குவதும் தான் அவரது ராஜ தந்திரங்கள்”என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது டிவிட்டர் பக்கத்தில் “காஷ்மீர், சீனா என இரு விவகாரங்களிலும் உண்மையாகத் தவறு செய்தது ஜவஹர்லால் நேருதான். 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி இந்தியாவுக்கு அமெரிக்கா எழுதிய கடிதத்தில் ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியா இருக்கலாம். ஆனால் சீனா வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நேரு தான் சீனா இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று அவர்களையும் இந்தக் குழுவில் சேர்த்தார். அது இன்று நமக்கே எதிராகத் திரும்பியுள்ளது. இப்போது காங்கிரஸ் தலைவர் யார் தவறு செய்தது என்று கூறுவாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version