தமிழ்நாடு

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் காணொளி வழியாக ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதன் பிறகு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்தித்துப் பேசினார்.

கொரோனா வைரஸ் பரவல்

தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற எந்த மாநிலத்திலும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை. விமான நிலையங்களில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினசரி கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை 11,000 ஆக உயர்த்த வேண்டும் என ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள நபர்கள், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பரவவில்லை. தனிநபர் பாதிப்பு தான் அதிகமாக ஏற்படுகிறது.

முக கவசம்

ஆக்ஸிஜன், படுக்கைகள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் 100% தேவை கையிருப்பில் உள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணிவது மிகவும் அவசியமாகும். கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version