தமிழ்நாடு

ஒரு ரூபாய்க்கு மாஸ்க், 10 ரூபாய்க்கு சானிடைசர்: புதுச்சேரி அரசு விற்பனை!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் கொரோனாவை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கடைகளில் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் மற்றும் பத்து ரூபாய்க்கு சானிடைசர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனையை தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

புதுவையில் உள்ள மக்களில் 64 பேர் இன்னும் சரியாக படவில்லை என்றும் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் போட வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் வாய் அல்லது மூக்கு வழியாக உடலினுள் செல்லும் என்றும் அதேபோல் உடம்பில் இருந்து வாய், மூக்கு வழியாக தான் வெளியேறி மற்றவர்களுக்கு பரவும் என்றும், எனவே மாஸ்க் அணிந்து கொண்டால் கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்தி விடலாம் என்றும் எனவே தயவு செய்து அனைவரும் அணியுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒரு ரூபாய்க்கு மாஸ்க் கிடைக்கிறது என்பதால் புதுவையில் உள்ள அனைவரும் அந்த மாஸ்க்கை வாங்கி அணிய தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல் தமிழகத்திலும் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version