உலகம்

கொரோனாவுக்கு ‘பை-பை’- இங்கிலாந்தில் இனி முகக் கவசம் கட்டாயமில்லை!!

Published

on

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இனி முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது.

இது குறித்து இங்கிலாந்து அரசு தரப்பு மேலும், ‘பலருக்கும் முகக் கவசம் அணிவது என்பது பிடிக்காத விஷயம் தான். எனவே இனிமேல் நாட்டில் முகக் கவசம் அணிய வேண்டுமா இல்லையா என்பது குறித்து அரசு உத்தரவிடாது. அதற்கு பதிலாக மக்கள் தங்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம்’ என்று தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்து அரசு, ஜூலை மாதம் 19 ஆம் தேதியோடு கொரோனா தொற்றின் தாக்கத்தை இல்லாமல் செய்வது என்கிற இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில் அந்த தேதியோடு அனைத்து வித கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் இங்கிலாந்தில் கொரோனா தொற்று முற்றிலும் ஒழிக்கப்படாத நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் நீக்குவது சாத்தியமில்லை என்று அரசு கருதுகிறது. அதே நேரத்தில் முதற்கட்டமாக முகக் கவசம் கட்டாயம் என்பதிலிருந்து, அது தனி நபர் விருப்பம் என்கிற இடத்துக்கு நகர்ந்துள்ளது. வரும் காலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்படும் எனத் தெரிகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version