தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி மாலையில்தான் இந்த தேர்வு நடைபெறும் தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனா பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2 தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் செல்போன் உள்பட எந்தவித மின் சாதன பொருட்களை கொண்டுவரக்கூடாது என்றும், டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும் என்றும் விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வு மாலையில் தான் நடத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது போல் இந்தத் தேர்விலும் தமிழ் தேர்வு உண்டு என்றும் இந்த தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்றும் 40 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending

Exit mobile version