தமிழ்நாடு

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல்!

Published

on

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றாகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் அந்த தொகுதிகள் எவை எவை என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. திருப்பரங்குன்றம், கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, திண்டுக்கல், அரூர் மற்றும் கீழ்வேளூர் ஆகிய ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தொகுதிகளுக்கு தற்போது வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பொன்னுத்தாய், கந்தர்வகோட்டை தொகுதிகள் சின்னத்துரை, கோவில்பட்டி தொகுதியில் சீனிவாசன், திண்டுக்கல் தொகுதியில் பாண்டி, அரூர் தொகுதியில் குமார் மற்றும் கீழ்வேளூர் தொகுதியில் நாகை மாலி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலுக்கு முழுவதுமாக தயாராகி விட்டது என்பதும் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 6 பேர்களும் நாளை மறுநாள் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் ஆறு பேர்களும் தங்களுடைய அரிவாள் சுத்தியல் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version