ஆட்டோமொபைல்

சரிந்த விற்பனை; அதிர்ச்சியில் மாருதி சுசூகி!

Published

on

மாருதி சுசூகி நிறுவனத்தின் இந்திய கார்கள் விற்பனை, ஜூன் மாதம் சரிந்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை 54 சதவீதம் சரிந்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் மாருதி சுசூகி 1.24 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது. அதுவே 2020 ஜூன் மாதம் 57,428 ஆக சரிந்துள்ளது.

உள்நாட்டு விற்பனை 53.7 சதவீதம் சரிந்து 53,139 கார்களை ஜூன் மாதம் மாருதி சுசூகி விற்றுள்ளது. 2019-ன் ஆண்டு ஜூன் மாதம் 1.14 லட்சம் கார்களை மாருதி சுசூகி விற்று இருந்தது.

அதே சமயம் வெளிநாட்டு விற்பனை 56.4 சதவீதம் சரிந்து 4289 கார்களை மாருதி சுசூகி விற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு ஜூன் மாதம் 9,847 கார்களை மாருதி விற்று இருந்தது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, தனிநபர் வாகன பயன்பாடு அதிகரிக்கும். அதனால் வாகன விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விற்பனை சரிந்தது மாருதி நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version