கிரிக்கெட்

சூப்பர்மேனால கூட இப்டிலாம் கேட்ச் பிடிக்க முடியாதுப்பா… ஒரே கையில் மார்டின் கப்டில் பிடித்த மரணமாஸ் கேட்ச்!!!

Published

on

ஒரு காலத்தில் கிரிக்கெட்டுக்கு ஜாண்டி ரோட்ஸ் எப்படி இருந்தாரோ, அதைப் போல தற்கால கிரிக்கெட்டுக்கு மார்டின் கப்டில். பொதுவாகவே நியூசிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள், ஃபீல்டிங் செய்வதில் கில்லாடிகள் என்றாலும் மார்டின் கப்டில் ஒரு படி மேலேதான். இத்தனைக்கும் கப்டிலின் ஒரு காலில், ஒரு விரலே இருக்காது. இப்படியான உடல் குறைபாட்டையும் வைத்துக் கொண்டு அவர் செய்யும் ஃபீல்டிங், மற்றவர்களைவிட அவரை இன்னும் ஒரு படி மேலே வைத்துள்ளது. அவரின் ஆவ்ஸம் கேட்சுகளின் பட்டியலில் சமீபத்தில் அவர் ‘சூப்பர் ஸ்மாஷ்’ கிரிக்கெட் தொடரில் பிடித்த கேட்ச்சையும் சேர்த்து விடலாம்.

சூப்பர் ஸ்மாஷ் தொடரில் ஆக்லாண்டு ஏசஸ் அணிக்காக கப்டில் விளையாடுகிறார். அந்த அணியை எதிர்த்து இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்டிரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணி விளையாடியது. இரண்டாவதாக பேட்டிங் செய்த டிஸ்டிரிக்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜார்ஜ் வொர்க்கர், லாங் ஆன் பகுதிக்கு பந்தை தூக்கி அடித்தார். முதலில் அது போகும் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது, எப்படியும் சிக்ஸர்தான் என்று முடிவு செய்யத் தோன்றும்.

ஆனால், லாங் ஆன் பகுதியில் நின்றிருந்தது கப்டில். மின்னல் வேகத்தில் ஓடி வந்த அவர், ஒற்றைக் கையை நீட்டி சூப்பர்மேன் போல டைவ் அடித்தார். பந்து கையில் பட்டு ஜகிள் ஆனது. இருந்தும் இரண்டாவது அட்டம்டில் அதைப் பிடித்து அசால்டாக தூக்கியெறிந்தார்.

நேரில் அதைப் பார்த்து கமன்ட்ரி செய்து கொண்டிருந்த வர்ணனையாளர்கள், ‘எப்படி அவர் செய்தார். எப்படி அவர் செய்தார். ஏன் என்றால் அவர் பெயர் மார்ட்டின் கப்டில்’ என்று புகழாரம் பாடினர்.

நீங்கள் பார்த்ததிலேயே இதுவே மிகச் சிறந்த கேட்சாக கூட இருக்கலாம்:

 

seithichurul

Trending

Exit mobile version