சினிமா செய்திகள்
காதலித்த பெண்ணை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்ட மூடர்கூடம் இயக்குநர்!
மூடர்கூடம் படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்த நவீன், திடீரென சிந்து என்ற பெண்ணை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நவீன் அறிவித்துள்ளார்.
”எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம்.. நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால் தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்பாளர்கள் அல்ல மத மறுப்பாளர்கள், மனித சமுதாயத்தின் ஆதரவாளர்கள் #மனிதசமத்துவம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டபோது எடுத்த புகைப்படத்துடன் நவீன் பதிவிட்டுள்ளார்.
நவீன் இயக்கி நடித்துள்ள அலாவுதீனும் அற்புத கேமராவும் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகவுள்ள புதுப்படத்தையும் நவீன் இயக்கி வருகிறார்.