உலகம்

தண்ணீரில் ‘மின்னல் வேகத்தில்’ ஸ்கேட்டிங் செய்து வீடியோ வெளியிட்ட மார்க் ஜுக்கர்பெர்க்!

Published

on

உலகின் நெம்பர் 1 இடத்தில் இருக்கும் சமூக வலைதளம் ஃபேஸ்புக். இந்த ஃபேஸ்புக்-ஐ நிறுவி, அந்த நிறுவனத்தில் தலைவராக இருந்து வருபவர் மார்க் ஜுக்கர்பெர்க்.

அவர் அவ்வப்போது தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும், தான் செய்யும் சாகசங்கள் குறித்தும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர், தண்ணீரில் அதிவேகமாக ஸ்கேட்டிங் செய்து ஒரு கையில் அமெரிக்க தேசியக் கொடியைப் பற்றிக் கொண்டு வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை தன் அதிகாரப்பூர்வப் பக்கங்களில் பதிவிட்டு சக அமெரிக்க குடிமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார்.

ஒரு பக்கம் அவரின் ஸ்கேட்டிங் திறமையை சிலர் வியந்தாலும், சிலரோ இது வெறும் ‘டிக் டாக்’ வீடியோ போலத் தான் உள்ளது. மீம் கன்டென்ட் போலத் தான் உள்ளது என்று கேலி செய்து உள்ளனர்.

மார்க் ஜுக்கர்பெர்க் விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. அவரின் செயல்பாடுகளும் அதையே உணர்த்தும் வகையில் அமைந்து வருகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version