தமிழ்நாடு

யூடியூப் மாரிதாஸ் மீதான 2 வழக்குகள் ரத்து, ஒரு வழக்கில் ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு!

Published

on

யூடியூப் மாரிதாஸ் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்குகளில் இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யூடியூப் பிரபலமான மாரிதாஸ் தமிழ்நாட்டை காஷ்மீருடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்திருந்தார். இந்த ட்விட்டை அவர் சிறிது நேரத்திலேயே டெலிட் செய்து விட்டாலும் அவர் வன்முறையை தூண்டும் வகையில் டுவிட் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி போலி மின்னஞ்சல் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.அந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டுமென மாரிதாஸ் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரே கொரோனா அதிகரிக்க காரணம் என்று மேலப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கையும் நீதிபதி ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மாரிதாஸ் மீது 2 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் அவர் சிறையில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version