வணிகம்
மார்ச் மாதம் மீண்டும் ஜிஎஸ்டி வசூல் சரிவு!
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மார்ச் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகச் சரிந்துள்ளது.
2020-ம் ஆண்டுக்கான மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 97,597 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே பிப்ரவரி மாதம் 1.05 லட்சம் ரூபாயாக ஜிஎஸ்டி வசூலாகி இருந்தது.
மார்ச் மாதம் வசூலான 97,597 கோடி ரூபாயில் மத்திய ஜிஎஸ்டி 19,183 கோடி ரூபாயும் மாநில ஜிஎஸ்டி 25,601 கோடி ரூபாயும், ஒருங்கிகனைக்கப்பட்ட ஜிஎஸ்டி 44,508 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.