இந்தியா

மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்!

Published

on

இந்த மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் அடையாள எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் கடந்த பல மாதங்களாக மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற ஆதார் – பான் இணைப்பு அவசியம் என்று அரசுத் தரப்பு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னர் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க கடைசி நாள் என்று காலக்கெடு விதித்திருந்தது மத்திய அரசு.

ஆனால் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அந்த காலக்கெடு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. சில தரப்பினர் இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று அரசு திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டது.

வரும் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் ஆதாருடன் பான் கார்டை இணைக்‍காவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் பான் கார்டு, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் செயலிழப்பு செய்யப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அத்துடன், பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம், வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ. 10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version