இந்தியா

வருமான வரிக்கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிப்பு! எத்தனை மாதம் தெரியுமா?

Published

on

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் மற்றும் பெரு நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 31 மட்டுமே கடைசி தேதியாக இருக்கும். அதன் பின் ஒருசில மாதங்கள் சில காரணங்களால் காலநீட்டிப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி முடிந்தது என்பதும், ஆனால் அதன்பின் படிப்படியாக கால நீட்டிப்பு செய்து டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் பெரும் நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்ய பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெரு நிறுவனங்கள் மார்ச் 15-ஆம் தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,

இந்த கால அவகாசம் பெருநிறுவனங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா மற்றும் இணைய வழியில் உள்ள சிக்கல்கள் காரணமாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த கால நீட்டிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version