பிற விளையாட்டுகள்

உலகின் அதிவேக மனிதர்: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் புதிய சாதனை

Published

on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் ஒருவர் சாதனை செய்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும், வரும் 8ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இத்தாலியை சேர்ந்த வீரர் ஒருவர் புதிய சாதனை செய்துள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நூறு மீட்டர் தூரத்தை 9.80 நொடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்துள்ளார்.

இத்தாலி நாட்டை சேர்ந்த மார்செல் ஜேக்கப் என்பவர் தான் 9.58 நொடியில் 100மீ ஓடி சாதனையை செய்து உள்ளார் என்றும் இதனை அடுத்து அவர் உலகின் அதிவேக மனிதன் என்ற பெயர் எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஏற்கனவே 9.58 வினாடிகளில் சாதனை செய்யப்பட்டுள்ளது என்றாலும் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இதுதான் மிகச் சிறந்த சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிரெட் கெர்லி என்ற வீரர் இரண்டாவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்று உள்ளார் என்பதும், கனடாவைச் சேர்ந்த ஆண்ட்ரே டிகிராஸி என்பவர் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version