வீடியோ

யூடியூப் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் மரண மாஸ்!

Published

on

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளிவரவுள்ள பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று ரிலீஸாகி மாஸ் கிளப்புகிறது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள மரண மாஸ் பாடலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்கு குரல் கொடுத்துள்ளார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவருடன் அனிருத்தும் இணைந்து ஒரு பக்கா ஸ்டைலான ரஜினியின் மாஸ் ஓபனிங் சாங் ரெடியாகி உள்ளது.

நேற்று வெளியான இந்த பாடலை 13 மணி நேரத்தில் 30 லட்சம் பேரை பார்க்க வைத்து, யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. நாளை மற்றொரு சிங்கிள் ரிலீசாகிறது. டிசம்பர் 9ம் தேதி முழு ஆல்பமும் வெளியாகிறது.

seithichurul

Trending

Exit mobile version