இந்தியா

MapmyIndia: கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் இஸ்ரோ!

Published

on

இந்த தலைமுறையினர் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் யாரிடமும் வழி கேட்பதில்லை. கூகுள் மேப் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை என்ற வசனமே அனைத்து இளைய தலைமுறையினர்களிடம் இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை செல்லாத இடமாக இருந்தாலும், கேள்வியே படாத இடமாக இருந்தாலும் கூகுள் மேப் கையில் இருந்தால் செல்ல வேண்டிய இடத்துக்கு மிகச்சரியாக அந்த மேப் கொண்டு போய் சேர்த்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூகுள் மேப்பிற்கு போட்டியாக தற்போது இஸ்ரோவும் களமிறங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் கைகோர்க்கும் ’மேப் மை இந்தியா’ மூலைமுடுக்குகளில் உள்ள இடங்களுக்கெல்லாம் வழி சொல்லும் வகையில் கூகுள் மேப்பிற்கு போட்டியாக களமிறங்கும் புதிய மேப் சேவையை தொடங்க உள்ளது. இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து மேப் மை இண்டியாவின் தலைவர் ரோஹன் வர்மா என்பவர் கூறியபோது, ‘வரைபடங்கள் மற்றும் புவியியல் சேவைகளை உள்நாட்டு நிறுவனம் வழங்குவது அனைத்து வகையிலும் சிறந்ததாக இருக்கும். “மேப்மைஇந்தியா, உள்ளூர், இந்திய நிறுவனமாக இருப்பதால், அதன் வரைபடங்கள் நாட்டின் உண்மையான இறையாண்மையை பிரதிபலிப்பதையும், தரவு பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது, இந்திய அரசு தகவல்களின் அடிப்படையில் இந்திய எல்லைகளை சித்தரிக்கிறது

இஸ்ரோவுடனான ஒருங்கிணைந்த கூட்டாண்மை மூலம், மேப்மை இந்தியா தனது பயனர்களுக்கு வழங்கும் வரைபடங்கள் மற்றும் புவி சார் தகவல்கள், இப்போது இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பூமி கண்காணிப்பு தரவுகளுடன் ஒன்றிணைக்கப்படும்.

இவ்வாறு ’மேப் மை இந்தியா’ தலைவர் ரோஹன் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version