பிற விளையாட்டுகள்

முதல் சுற்றில் வெற்றி, 2வது சுற்றில் தோல்வி: கலைந்தது இந்தியாவின் பதக்க கனவு!

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே இந்தியா பெற்றுள்ளது என்பதும் பதக்கப்பட்டியலில் 25 க்கும் கீழ் உள்ள இடத்தில்தான் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர், மற்றும் சவுரவ் சவுத்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து இந்த ஜோடி 2-வது சுற்றில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்று நடைபெற்ற நிலையில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர் மற்றும் சவுரவ் சவுத்ரி ஜோடி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவின் பதக்க கனவு கலைந்தது. அதேபோல் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யசஷ்வினி தேஸ்வால் – அபிஷேக் வர்மா இணை முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தனர்

இதேபோல்தான் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி வாள்சுற்று பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியாவுக்கு மேலும் ஒரு சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் பிரிவில் பெற்று கொடுத்த ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் மட்டுமே தற்போதைக்கு இந்தியாவின் பதக்கப்பட்டியலில் உள்ள நிலையில் மேலும் சில பதக்கங்கள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version