தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி பற்றி சர்ச்சை பேட்டி: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் தள்ளுபடி- கைதா?

Published

on

நடிகர் விவேக், சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதற்கு அடுத்த நாளே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், அடுத்த நாள் யாரும் எதிர்பாராத விதமாக காலமானார். தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது இச்சம்பவம். விவேக்கின் மரணத்திற்குத் தடுப்பூசி தான் காரணமா என்கிற கேள்விகளும் அப்போது எழுந்தன. அதற்கு விவேக்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைத் தரப்பு, ‘தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் விவேக்கின் மரணத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறியது. 

விவேக் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தான் மன்சூர், ‘யார் கேட்டார்கள் தடுப்பூசியை. இவர்களே வலுக்காட்டாயப்படுத்தி விவேக்கிற்கு தடுப்பூசியைப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால் தான் தற்போது அவர் சுயநினைவு இல்லாமல் துவண்டு கிடக்கிறார். தடுப்பூசியில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பது பற்றி இதுவரை எந்த வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது மக்களை தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். கொரோனா என்பது பொய்யான ஒரு விஷயம். நாட்டில் சோதனைகள் என்பது செய்யப்படவில்லை என்றால் கொரோனா என்பது இருப்பதே தெரியாமல் மறைந்துவிடும். 

யாரும் முகக் கவசம் போடக் கூடாது. அப்படிப் போடுவதால் நம் காற்றை நாமே சுவாசிக்கும் படியான தவறான விஷயம் நடக்கிறது. எனவே மக்கள் கொரோனா, தடுப்பூசி என்னும் மாயைகளில் இருந்து வெளியே வர வேண்டும். நாரும் மாஸ்க் அணியக் கூடாது, தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முடித்தார். 

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது மன்சூர் சொன்ன கருத்துகள். இதையடுத்து அவர் மீது தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து தனக்கு முன் ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று மன்சூர் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

Trending

Exit mobile version