இந்தியா

அடுத்த முப்படைத் தலைமை தளபதி இவரா? பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை

Published

on

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று குன்னூர் அருகே திடீரென விபத்துக்குள்ளானதில் முப்படை இராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் பலியாகினர் என்ற என்பது தெரிந்ததே.

முப்படை தலைமை தளபதியின் மறைவால் நாட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர் என்பதும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் ஒன்று டெல்லி எடுத்துச் செல்லப்படள்ளதாகவும், நாளை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் மறைவை அடுத்து புதிய முப்படை தளபதி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கு தகுதியான ஒரு நபரை தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது முப்படை தலைமை தளபதி பதவிக்கு ராணுவ தளபதி மனோஜ் நரவானே அவர்களை நியமனம் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு சிலர் பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிசீலனையில் இருந்தாலும் மனோஜ் நரவானே அவர்களுக்கு முப்படை தலைமை தளபதி பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version