தமிழ்நாடு

வேட்பாளருக்கு நெஞ்சுவலி: தந்தைக்காக பிரச்சாரம் செய்யும் மகன்!

Published

on

வேட்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவருடைய மகன் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் காமராஜ். கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அதன் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரால் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய முடியாத உள்ளது.

இந்த நிலையில் தனது தந்தை காமராஜர் அவர்களுக்காக களத்தில் இறங்கி அவரது டீன்ஏஜ் மகன் ஜெயேந்திரன் என்பவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தைக்காக மாணவர்கள் ஜெயேந்திரன் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஜெயேந்திரன் பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் இவருக்காகவே அமமுக சின்னத்தில் பலர் ஓட்டு போடுவோம் என்று கூறி வருவதையும் ஆங்காங்கே பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காமராஜ் விரைவில் பிரச்சாரத்துக்கு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version