இந்தியா

இந்தியாவில் நடக்க கூடாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை!

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தற்போது நாட்டில் நடப்பவைகளை குறிப்பிட்டு வேதனையடைந்தார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சில நடக்க கூடாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது. பெருகிவரும் சகிப்பின்மை, வகுப்புவாதம், வன்முறையால் நாட்டின் பன்முகதன்மை பாதிக்கப்பட்டு, நாடு பிளவுபடும் சூழலுக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இவை நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள குறிக்கோள்களுக்கும், எண்ணங்களுக்கும் எதிராக உள்ளது.

நம் தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை விட வேறு எதுவும் முக்கியமில்லை. இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது. சமீப காலமாக நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது என தனது வேதனையை வெளிப்படுத்தினார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜகவின் எல்.கே.அத்வானி, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் பிற எம்பிக்கள் பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

seithichurul

Trending

Exit mobile version