சினிமா செய்திகள்

அஜித் ஜோடியாக மஞ்சுவாரியர்: வேற லெவல் கேரக்டர் என தகவல்

Published

on

அஜித் நடித்து வரும் ’அஜீத் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அஜீத் ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அஜித் 61 இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணா சாலை போன்ற போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் கதை என்பது வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையரை பிடிப்பதுதான் என்றும் அஜித் கேரக்டர் தான் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் வங்கி கொள்ளையில் ஈடுபடும் அஜித்துக்கு உதவி செய்யும் கேரக்டராகவும்,அவரது காதலியாகவும் மஞ்சுவாரியர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதுவரை மஞ்சுவாரியர் நடிக்காத கேரக்டர் என்றும் அவருக்கு இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலை ’அஜித் 61’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

Trending

Exit mobile version