சினிமா செய்திகள்

ஜெயலலிதாவாக நடிக்க மறுத்த மஞ்சிமா மோகன்!

Published

on

நடிகை மஞ்சிமா மோகன், ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். ஆனாலும், படமாக உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படங்களில் எந்த படத்திலும் மஞ்சிமா மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால், அதற்கு பதிலாக மஞ்சிமா மோகனை அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயலலிதா குறித்த வெப்சீரிஸில் நடிக்க மஞ்சிமா மோகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

ஆனால், இப்போதைக்கு வெப் சீரிஸில் நடிக்கும் ஐடியா இல்லை என கெளதம் மேனனுக்கு நோ சொல்லியுள்ளார் மஞ்சிமா மோகன்.

மஞ்சிமா மோகன் நடிப்பில் மே 1ம் தேதி வெளியான தேவராட்டம் சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பினாலும், பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டி வருகிறதாம்.

seithichurul

Trending

Exit mobile version