டிவி

இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா மணிமேகலை?

Published

on

சின்னத்திரை தொகுப்பாளரான மணிமேகலை இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சின்னத்துறையில் தொகுபாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்த மணிமேகலை பின்பு ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக பிரபலமடைந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு நடன உதவி இயக்குநர் ஹூசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதலில் இவர்களது காதலுக்கு மதம் காரணமாக வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் இப்பொழுது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் மணிமேகலை ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினார்.

தொகுப்பாளராக இனி கவனம் செலுத்த இருப்பதாகவும் அதன் காரணமாகவே மணிமேகலை நிகழ்ச்சி விட்டு வெளியேறினார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தன் கணவர் ஹுசைனுடன் கருப்பு நிற உடை அணிந்து மணிமேகலை ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதன் மூலம் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு மணிமேகலை கடுமையாக, ‘வாழ்க்கையில் உருப்படுவதற்கான வழியை தேடுங்கள். அதை விட்டுவிட்டு தேவையில்லாததை இங்கு வந்து கொட்டாதீர்கள்’ என தெரிவித்திருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version