Connect with us

சினிமா செய்திகள்

மணிகர்ணிகா: தி குயின் ஆஃப் ஜான்சி விமர்சனம்!

Published

on

குயின் படத்தில் நடித்து தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத் நிஜ குயினாகவே நடித்துள்ள படம் தான் மணிகர்ணிகா.

சுதந்திர போராட்ட வீரமங்கை ஜான்சி ராணி லக்‌ஷ்மிபாயை நாம எல்லாரும் பள்ளி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம், அதனை திரைப்படமாக 100 மடங்கு வேகத்துடனும் ஆக்ரோஷத்துடனும் விருந்தளித்துள்ளார் கங்கனா ரனாவத்.

நடிப்பை தாண்டி இந்த படத்தின் மூலம் இயக்குநராக புரொமோட் ஆகியிருக்கும் கங்கனாவுக்கு வாழ்த்துகள்.

இயக்குநர் ராதாகிருஷ்ண ஜகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து இயக்கியுள்ள மணிகர்ணிகா படத்திற்கு மற்றொரு பலமாக இருப்பவர், இசையமைப்பாளர் சங்கர் – இஷான் –லாய்.

மணிகர்ணிகாவின் கதை தான் என்ன?

சத்ரிய குல பெண்ணாக இல்லாவிட்டாலும், வீரமங்கையாக வளரும் மணிகர்ணிகாவை, ஜான்சி ராஜா கங்காதர் ராவுக்கு மணமுடித்து வைக்கின்றனர். ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடக்கும் அவர், வளையல் அணிந்த கையுடன் உள்ளார். ராஜாவை திருமணம் செய்த பின்னர், மணிகர்ணிகா லக்‌ஷ்மிபாயாக பெயர் மாற்றம் பெறுகிறார்.

ராஜாவையும் மணிகர்ணிகாவுக்கு பிறக்கும் குழந்தையையும், ராஜ்யத்தில் இருக்கும் சதிகாரன் விஷம் வைத்து கொல்கிறான். சாகும் தருவாயில், மீண்டும் மணிகர்ணிகாவாக மாறி ஜான்சி நாட்டை வெள்ளையர்களிடமிருந்து மீட்க வேண்டும் என ராஜா கேட்டுக் கொள்ள, வெள்ளையர்களை அழிக்க போரிடும் வீரமங்கையாக ஜான்சி ராணியாக மணிகர்ணிகா மாறுவதும், வெள்ளையர்களின் சூழ்ச்சியால் போரில் வீரமரணம் அடைவதுமென சுதந்திர உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் ஈட்டியாய் நெஞ்சில் பாய்ச்சியுள்ளார் கங்கனா ரனாவத்.

பிளஸ்:

கங்கனா ரனாவத்தின் நடிப்பும் இயக்கமும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. வீரமங்கையாக ராணியாக, கணவன் மற்றும் குழந்தையை இழந்த அபலையாக, மீண்டும் தாய் நாட்டிற்கு போராடும் ஜான்சி ராணியாக என அனைத்து இடங்களிலும் சிக்ஸர் அடித்துள்ளார் கங்கனா.

மைனஸ்:

கங்கனா ரனாவத்தை தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. முதல் பாதியில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யும் பாடல்கள். பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும், இத்தனை பாடல்கள் தேவையற்றது. பாகுபலியை மிஞ்சாத போர்க்காட்சிகள் இவை படத்தின் மைனஸாக இருந்தாலும், சுதந்திர உணர்வை ஊட்டும் காட்சிகளால் மறக்கடிக்கப்படுகின்றன.

வீரபாண்டிய கட்டபொம்மன், பகத்சிங், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், கொடிகாத்த குமரன் போன்றவர்களின் வரலாற்றை படிக்கும் போதே வீர உணர்ச்சி கொழுந்து விட்டு எரியும் அல்லவா? அதே உணர்ச்சியை திரையில் காட்சிகளாக கொடுத்து குடியரசு தினத்துக்கான சரியான ரிலீசாக மணிகர்ணிகா ரிலீசாகி இருப்பதிலேயே வென்று விட்டது.

சினி ரேட்டிங்: 3.75/5.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!