இந்தியா

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழக காவல் துறைக்கு அதிரடி உத்தரவு!

Published

on

இன்று கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் தீவிரவாதிகள் சதித்திட்டம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மங்களூருவில் கூட்டம் நிறைந்த பகுதியில் இன்று திடீரென ஆட்டோ ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் அட்டோ ஓட்டுநர் மற்றும் அதிலிருந்த பயணி ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்றும், அதற்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாக கர்நாடக மாநில தலைமை காவல் அத்ஹிகாரி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு மூலம் தெரிவித்தார்.

மேலும் மாநில காவல் துறையினரும் தேசிய விசாரணை ஆணையங்களும் விசாரணை நடத்த உதிரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் கோயம்புத்தூரில் சமையல் எரிவாயு சிலிண்டரில் தயார் செய்யப்பட்ட குண்டு ஒன்று அதிகாலை வெடித்தது. அது குறித்து தேசிய விசாரணை ஆணையம் இப்போது தீவிர விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் இன்று அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆட்டோவில் குண்டு வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் முக்கிய இடங்கள், கர்நாடகா எல்லைப் பகுதிகள் போன்றவற்றில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். சந்தேக நபர்களைக் கண்காணித்து பிடித்து தீவிர விசாரணை நடத்துமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version