இந்தியா

லக்கிம்பூர் சம்பத்தை கண்டித்த மேனகா காந்தி, வருண் காந்தி நீக்கம்: பாஜக அதிரடி

Published

on

உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் விவசாயிகள் இடையே திடீரென மத்திய அமைச்சர் மகன் ஒருவரின் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர் என்பதும், இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லக்கிம்பூர் சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்த மேனகா காந்தி, பலியானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் விவசாயிகள் கூட்டத்தின் மீது கார் மோதிய புதிய வீடியோ ஒன்றையும் வருண் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்

ஏற்கனவே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் வருண்காந்தி என்ற நிலையில் தற்போது வீடியோ ஒன்றையும் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சற்றுமுன் பாஜகவின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் மேனகா காந்தி மற்றும் வருண் காந்தியின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜகவுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்துவரும் சுப்ரமணியசாமி பெயரும் நீக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிக்கு ஆதரவாக பேசிய மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் அவர்களும் இந்த நிர்வாகக்குழு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புதிய நிர்வாக குழு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அஸ்வினி வைஷ்ணவ் ,ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 80 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version