தமிழ்நாடு

வாகனங்களுக்கு இனி 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம்: சென்னை ஐகோர்ட்

Published

on

இனிமேல் புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வாங்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் என்ற அடிப்படையில் இந்த 5 ஆண்டுகள் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களுக்கான காப்பீடு சட்டத்தின்படி புதிய வாகனங்கள் வாங்கும் போது அது காராக இருந்தாலும் சரி, இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி ஓராண்டு மட்டுமே காப்பீடு செய்வது கட்டாயம் என்று இதுவரை வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வாகனத்தின் உரிமையாளர் ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் அல்லது சம்பந்தப்பட்ட வாகனங்களால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றிற்கு உரிய இழப்பீடு காப்பீடு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் இதை உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஐஆர்டிஏ அறிவுறுத்தலின்படி தற்போது புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் வரை காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதனை என்று உறுதி செய்துள்ளது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாங்கப்படும் புதிய வாகனங்களுக்கு இனி ஐந்து ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் என்றும் பின்னர் வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version