தமிழ்நாடு

சென்னையை நெருங்குகிறது ‘மாண்டஸ்’ புயல்.. எத்தனை நாளுக்கு கனமழை!

Published

on

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உருவான நிலையில் தற்போது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 640 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் அதிகாலையில் இந்த புயல் புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்பதால் சென்னையில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை மட்டுமின்றி கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்பட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை கரையை கடக்கும் புயல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version